என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஞானதீபம் கல்லூரியில் காசநோய் விழிப்புணர்வு முகாம்
- கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.
மார்த்தாண்டம்:
மார்த்தாண்டம் வடக்கு தெருவில் அமைந்துள்ள ஞான தீபம் கல்லூரியில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் காசநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஞான தீபம் கல்லூரி தாளாளர் தோமஸ் ராஜ் மற்றும் கல்லூரி முதல்வர் கலாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மூத்த பேராசிரியர் செல்வின் இன்பராஜ் வரவேற்று பேசினார்.
முகாமில் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் பிரிட்டோ கலந்துகொண்டு காசநோய் விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினார். அதில் காசநோய் எவ்வாறு வருகிறது, அதன் அறிகுறிகள், எவ்வாறு காசநோய் வராமல் தடுக்கலாம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் காசநோய்க்கு என்னென்ன மருந்துகள் உட்கொள்ளலாம் போன்றவற்றினை குறித்து மாணவர்களிடையே பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். மேலும் வெட்டுமணி அரசு மருத்துவமனை சுகாதார பார்வையாளர்கள் சாந்தி மற்றும் அகிலா ஆகியோர் இந்த முகாமில் கலந்துகொண்டனர். விழா முடிவில் ஆசிரியை சிஞ்சு நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஞானதீபம் கல்லூரி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.