என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அதிகாரி கொலை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து உள்ளது
- பொன். ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
- நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தோறும் மான்கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த நிலையில் 100-வது மான் கி பாத் நிகழ்ச்சி இன்றுநாடு முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.
நாகர்கோவில் மாநகரில் பல இடங்களில் மான்கி பாத் நிகழ்ச்சி நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபோல நெச வாளர் காலனியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி யை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஸ்ரீ வைகுண்டத்தில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதல்-அமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையில் கூட மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. நேர்மையான அதிகாரிகள் பணி செய்ய முடியவில்லை. தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வீடு தேடி கொண்டு கொடுக்கப்படும் என்று கூறியது போன்று மதுவை வீடு தேடிக் கொண்டு கொடுக்காமல் இருந்தால் சரி. காங்கிரஸ் ஆட்சியின் மிசா. பா.ஜ.க. ஆட்சியில் வருமானவரித்துறை சோதனை. இந்த இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் குறித்து கேள்வி எழுப்பிய போது மிசாவின் கொடுமைகளை அவரது தந்தையிடம் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அல்லது ஆர்காடு வீராசாமியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை பா.ஜ.க. மகத்தான வெற்றி பெறும்.
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. பலமுறை குற்றம் சாட்டியும் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அச்சம் காரணமாக குமரி மாவட்ட அதிகாரிகள் ஒதுங்கி நிற்கிறார்கள். நாடாளு மன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு இடையேயான சீட்டு ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிந்த பிறகு தான் தெரியும். பா.ஜ.க. மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்கட்டும். இதுதொடர்பாக மாநில தலைவர் ஏற்கனவே பதில் கூறியிருக்கிறார். கலைஞர் முதல்வராக, திரைப்பட தயாரிப்பாளராக, திரைக்கதை எழுத்தாளராக பல முகங்கள் அவருக்கு உண்டு. அவருடைய நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். அவருக்கு நிறைய புகழ் சேர்க்க முடியும். ஒரு பேனா மட்டும் போதும் என்று கூறுவது பேதமை. பேனாவிற்கு அப்பாற்பட்டு தமிழகத்தில் அவர் மிக முக்கிய தலைவர். இது எனது சொந்த கருத்து. பேனா மட்டுமல்ல அவருக்கு நிறைய செய்ய முடியும். அதனையும் அவர்கள் யோசிக்க வேண்டும். கலைஞருக்கு உரிய மரியாதை அவருக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்