என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது ஏன்?
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறி கீழப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46), பெயிண்டர். இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38).
இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு, ஸ்ரீதேவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். உஷாபார்வதி தரையில் பிணமாக கிடந்தார். 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பாபு கடந்த திங்கள்கிழமை தான் வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை கொடுத்து உள்ளார்.
அதன் பிறகு கடந்த 2 நாட்களாக வீட்டில் எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே திங்கள்கிழமையே இவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறா ர்கள். பிணமாக கிடந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேருக்கும் திருமணமாகாத நிலையில் உஷா பார்வதி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பலியான 3 பேரின் பெற்றோரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவர்களது உடலை ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உற வினர்கள் யாரும் வாரதால 3 பேரின் உடலை ஒப்படைப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்