search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கராத்தே போட்டி: கிருஷ்ணகிரி பாரத் பள்ளி தேசிய அளவில் சாதனை
    X

    வெற்றி பெற்ற மாணவரை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பாராட்டினார்.

    கராத்தே போட்டி: கிருஷ்ணகிரி பாரத் பள்ளி தேசிய அளவில் சாதனை

    • மாணவ, மாணவிகள் அனைவரும் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை கற்றிட வேண்டும்.
    • வெற்றி கோப்பை பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    தேசிய அளவில் சேலத்தில் கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் திருமலை வாசன் 11 வயதிற்கு உட்பட்ட வர்களுக்கான போட்டியில் கலந்து கொண்டு தேசிய அளவில் முதல் இடத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    வெற்றி பெற்ற மாணவரை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி பாராட்டினார். அவர் பேசுகையில் தற்காப்பு கலை என்பது கடினமான சூழ்நிலையில் தங்களை தற்காத்து கொள்ளவும், மன திடத்தை வலுப்படுத்தவும், ஒருமுகப்படுத்தவும் செய்யும். ஆகவே மாணவ, மாணவிகள் அனைவரும் ஏதேனும் ஒரு தற்காப்பு கலையை கற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    வெற்றி கோப்பை பாரத் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணியிடம் வழங்கப்பட்டது. இதே போல பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற பாரத் பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் முதல்வர் விஜயகுமார், துணை முதல்வர் நசீர்பாஷா, கராத்தே பயிற்சியாளர் மாரியப்பன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி னார்கள்.

    Next Story
    ×