என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வள்ளியூர் சூட்டுபொத்தை மலை உச்சி மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது
- வள்ளியூர் சூட்டு பொத்தை அடி வாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி திருக்கோவில் உள்ளது.
- கோவிலில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்டத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டு பொத்தை அடி வாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவிலில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழா, கிரிவல தேரோட்டத்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக நேற்று சூட்டுபொத்தை மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் திரு விழாவை முன்னிட்டு பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் அறக்காவலர் பாஸ்கர் ராமமூர்த்தி திருக்கார்த்திகை தீபம் ஏற்றினார்.
பின்னர் மாதாஜி அருளாசீர் வழங்கினார். இதில் திரளான பக்தர் கள் பங்கேற்று வழி பட்டனர். இரவு கிருஷணாஞ்சலி அகாடமி சார்பில் பரதநாட்டியம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு குரு ஜெயந்தி ஆராதனை, அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலை 11 முதல் 1 மணி வரை சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி 10-ம் நாள் விழாவின் போதும் மாலை 5.30 மணிக்கு முத்துகிருஷ்ணா சித்திரக்கூடத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை வள்ளியூர் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.