search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் கருடசேவை
    X

    கருட வாகனத்தில் ஸ்ரீ நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் நான்கு ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்த காட்சி.

    தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் கருடசேவை

    • தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் 5-ம் நாளான நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வருகிற 13-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டமும், 14-ந் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் விழா நாட்களில் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    5-ம் நாளான நேற்று கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. கருட வாகனத்தில் ஶ்ரீ நிகரில் முகில்வண்ணனும், அன்ன வாகனத்தில் திருப்பேரை நாச்சியாரும் நான்கு ரத வீதி வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தனர். வருகிற 12-ந் தேதி காலை 7 மணிக்கு உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி,பூதேவி,நாச்சியார்களுடன் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்றைய தினம் மாலை 4 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளி புறையூர் ஆணையப்பபிள்ளை சத்திரம் வீதி புறப்பாடு நடக்கிறது. 13-ந் தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டமும், 14-ந் தேதி காலை 8 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×