என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை
- ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம்.
- பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தந்து அருள் பாலித்தார்.
தென்திருப்பேரை:
நவதிருப்பதிகளில் 9-வது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கருடசேவை நடந்தது.
ஒவ்வொரு ஆண்டும் கும்பாபிஷேகம் நடந்த வைகாசி மாத உத்திரட்டாதி நட்சத்திர நாளன்று வருஷாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி காலை 5 மணிக்கு விஸ்வரூபம், 7 மணிக்கு கும்பம் வைத்து ஹோமம் நடந்தது. 8.30 மணிக்கு பூர்ணாகுதி, 9 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், 10 மணிக்கு தீபாராதனை, நாலாயிர திவ்யப்பிரபந்தம், 12 மணிக்கு சாத்துமுறை, தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமிகள் ஆதிநாதர் ஆழ்வார் வாகன குறட்டிற்கு எழுந்தருளினார். 7 மணிக்கு பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் காட்சி தந்து அருள் பாலித்தார். பின்னர் மாட வீதி உலா நடந்தது. இந்நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர், அர்ச்சகர்கள் கண்ணன், விவேக் நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவல மணிகண்டன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாச சேவைகள் அறக்கட்டளை பாலாஜி, பத்மநாபன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.