search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலாயுதம்பாளையத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி
    X

    வேலாயுதம்பாளையத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி

    • பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்
    • திருமணம் மற்றும் கோவில் விசேஷங்கள் இல்லாததால் விலை சரிந்தது

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், நொய்யல் மரவா பாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம் , ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை, ரோஜா, செவ்வந்தி, சம்பங்கி சம்பங்கி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிர் செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் கோவிலுக்கு வரும் விவசாயிகளுக்கும் அருகாமையில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வேலாயுதம்பாளையம் ,நொய்யல், புன்னம் சத்திரம், தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, என். புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.650- க்கும், சம்பங்கி கிலோ ரூ.180- க்கும், அரளி கிலோ ரூ.180- க்கும், ரோஜா கிலோ ரூ.260- க்கும், முல்லைப் பூ ரூ.550- க்கும், செவ்வந்திப்பூ ரூ.280- க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் விற்பனையானது . நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி கிலோ ரூ.70- க்கும், அரளி கிலோ ரூ.120- க்கும், ரோஜா கிலோ ரூ.200- க்கும்,முல்லைப் பூ கிலோ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200- க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் விற்பனையானது. திருமணம் மற்றும் கோவில் விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது . இதனால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×