என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்மங்கலம் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
    X

    மண்மங்கலம் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை

    • மண்மங்கலம் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்து

    கரூர்

    கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மண்மங்கலம் வட்டக கிளை சார்பில் 5-வது வட்ட பேரவை கூட்டம் அண்மையில் புகழூரில் நடைபெற்றது. கூட்டத்தில் கரூரை அடுத்துள்ள மண்மங்கலம் தேசி நெடுஞ்சாலையில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகழூர் வட்டம் மூலிமங்கலத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும். என்.புதூர் அரசு உயர்நிலை பள்ளியில் புதிய சமையல் கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×