search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு  சேலத்தில் இருந்து   51 பேர் பயணம்
    X

    காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு சேலத்தில் இருந்து 51 பேர் பயணம்

    • காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரசில் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து 51 பேர் புறப்பட்டனர்.

    Next Story
    ×