search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் மலர்களால் ஜொலித்த  காசி விஸ்வநாதர் கோவில்
    X

    வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில்.

    தென்காசியில் மலர்களால் ஜொலித்த காசி விஸ்வநாதர் கோவில்

    • காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
    • மலர்களால் ஜொலித்த கோவிலில் நின்று பக்தர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் சமேத காசி விஸ்வநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்த ஆண்டிற்கான மாசி மக பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தின் சார்பில் மண்டகப்படி திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    நேற்று தேவர் சமுதாயம் சார்பில் நடந்த 7-வது நாள் திருவிழாவில் காசி விஸ்வநாதர் கோவில் முகப்பு பகுதியில் இருந்து கோவிலின் உள்ளே இருக்கும் கொடிமரம் வரையிலும் வண்ண வண்ண மலர்களால் கோலமிட்டு இருந்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் மலர்களால் ஜொலித்த கோவிலில் நின்று தங்களின் செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். திருவிழாவின் 9-ம் திருநாளான நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலையில் சுவாமி மற்றும் அம்பாள் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. மேலும் திருவிழா நிறைவு நிகழ்ச்சியாக வருகிற 6-ந்தேதி தீர்த்த வாரி நிகழ்ச்சியும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது.

    Next Story
    ×