search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை காதி கிராப்ட்டில் கதர் சிறப்பு விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்
    X

    தஞ்சாவூர் காதிகிராப்ட்டில் கதர் சிறப்பு விற்பனையை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    தஞ்சை காதி கிராப்ட்டில் கதர் சிறப்பு விற்பனை- கலெக்டர் தொடங்கி வைத்தார்

    • அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது.
    • சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு கதர்கிராமத் தொழில் வாரியம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தஞ்சாவூர் காந்திஜி ரோட்டில் உள்ள காதிகிராப்ட்டில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தார்.

    நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்திற்கு 58.22 லட்சம் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறியீட்டினை அடைவதற்கு கதர் துறையால் தயார் செய்யப்படும் அசல் வெள்ளி சரிகை பட்டு ரகங்கள், கதர் ரகங்கள், பாலியஸ்டர் ரகங்கள், உல்லன் ரகங்கள் ஆகியவைகள் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் புத்தம் புதிய வடிவமைப்பில் உள்ளது.

    மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக தயார் செய்யப்பட்ட மெத்தை மற்றும் தலையணைகள் மெத்தை விரிப்புகள், கதர் அங்காடியில் இருப்பில் உள்ளது.

    இவை அனைத்தும் தஞ்சாவூர் கதர் அங்காடியில் கிடைக்கும் . கதர் பருத்திக்கு 30 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். இதேப்போல் பட்டு 30 சதவீதம், பாலியஸ்டர் 30 சதவீதம், உல்லன் 20 சதவீதத்தில் கிடைக்கும்.

    பொதுமக்கள்,அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஆதவை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

    முன்னதாக மகாத்மா காந்தி படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி கதர் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இவ்விழாவில் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குனர் கோபா லகிருஷ்ணன், உதவி இயக்குநர்சாவித்திரி, கண்காணிப்பாளர் பிரான்சிஸ் தெரசா மேரி, மேலாளர்சாவித்திரி, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) சரவணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×