search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி கல்லூரி மாணவர் கொலை வழக்கு
    X

    ஷாரோன்ராஜ் - கிரீஷ்மா

    குமரி கல்லூரி மாணவர் கொலை வழக்கு

    • போலீஸ் காவல் முடிந்ததால் கோர்ட்டில் கிரீஷ்மா இன்று ஆஜர்
    • கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விட்டனர்

    கன்னியாகுமரி:

    கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள முன்சிறை பகுதியைச் சேர்ந்தவர் ஷாரோன்ராஜ் (வயது 23).

    இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, மாவட்ட எல்லையில் உள்ள பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி கிரீஷ்மா (22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் காதலாக மாறிய நிலையில், உடல் நலக்குறைவால் ஷாரோன் ராஜ் பாதிக்கப்பட்டார். பாறசாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த மாதம் 25-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    அவரது சாவுக்கு காதலி கிரீஷ்மா தான் காரணம் என, ஷாரோன்ராஜின் தந்தை புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். கிரீஷ்மாவை கைது செய்து விசாரித்த போது, அவர் ஷாரோன்ராஜிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் ஷாரோன்ராஜை கொலை செய்ய கடந்த 3 மாதங்களாகவே கிரீஷ்மா திட்டமிட்டு அதற்கான முயற்சியில் இறங்கி யிருப்பது தெரிய வந்தது. கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திரு மணம் நிச்சயமானதும், ஜாதகப்படி அவரது முதல் கணவர் இறந்து விடுவார் எனக் கூறப்பட்டதாலும் இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டதாக விசாரணை யில் தகவல் கிடைத்தது.

    போலீஸ் விசாரணையின் போது, கிரீஷ்மா தற்கொ லைக்கு முயன்றதால் ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டார். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். ஷாரோன்ராஜிக்கு விஷம் கொடுத்ததாக கூறப்படும் கிரீஷ்மாவின் வீடு, இருவரும் திருமணம் செய்ததாக கூறப்பட்ட வெட்டுக்காடு தேவாலயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதல் கட்டமாக கிரீஷ்மா அழைத்துச் செல்லப்பட்டார்.

    நேற்று 2-வது கட்டமாக கிரீஷ்மா, குமரி மாவட்டம் அழைத்து வரப்பட்டார். ஷாரோன்ராஜ் படித்த கல்லூரி, அவர்கள் ஜோடி யாக சுற்றித்திரிந்த சுற்றுலா தலங்கள் போன்றவற்றுக்கு கிரீஷ்மாவை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி னர். அப்போது கிரீஷ்மா எந்தவித குற்ற உணர்வும் இல்லாமல் போலீசாரிடம் பேசி உள்ளார்.

    கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக கொலை சதியை அரங்கேற்றிய கிரீஷ்மா, டோலோ மாத்திரையை பொடி செய்து அதனை காதலன் ஷாரோன்ராஜிக்கு கொடுத்துள்ளார். அதனை ஒரே மடக்காக குடிக்க வேண்டும் என 'ஜூஸ் சேலஞ்சு'ம் நடத்தி உள்ளார்.அதன்படி குளிர்பானத்தை குடித்த ஷாரோன்ராஜ், கசப்பாக இருந்ததால் அதனை துப்பிவிட்டாராம். இதனால் அவர் தப்பி விட்டதாக போலீஸ் விசாரணையின் போது கிரீஷ்மா தெரிவித்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    குளிர்பானம் கசப்பாக இருப்பது பற்றி ஷாரோன்ராஜ் கேட்ட போது, அது காலாவதியானதாக இருக்கலாம் எனக் கூறி சமாளித்து விட்டதாகவும் கிரீஷ்மா கூறியுள்ளார்.

    காதலன் ஷாரோன்ராஜுடன் திற்பரப்பு விடுதியில் 2 முறை அறை எடுத்து தங்கியதாக கிரீஷ்மா விசாரணையின் போது கூறியிருந்ததால், அவரை நேற்று போலீசார் அங்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விடுதி அறையில் அவர்கள் தங்கி இருந்ததற்கான பதிவேடுகளையும் போலீசார் கைப்பற்றினர்.

    அதன்பிறகு மாலையில் போலீசார், கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்றனர். அவரது காவல் முடிவடைந்துவிட்டதால், இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்ட னர். இன்னும் விசாரணை பாக்கி இருந்தால், கிரீஷ்மாவை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.

    இந்த வழக்கில் தடயங்களை அழித்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோர் விசாரணைக்கு பின்னர், போலீஸ் காவல் முடிவடைந்த தால், ஏற்கனவே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விட்ட னர் என்பது குறிப்பிடத்த க்கது.

    Next Story
    ×