search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரியில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம்  அடுத்த மாதம் 12-ந்தேதி புறப்படுகிறது
    X

    திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரியில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலம் அடுத்த மாதம் 12-ந்தேதி புறப்படுகிறது

    • அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
    • இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட திருக்கோ வில் நிர்வாக அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் சுசீந்திரத்தில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது. அலுவலக மேலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், துளசிதரன் நாயர், ஜோதீஷ்குமார், சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவனந்த புரம் பத்மநாபசாமி கோவி லில் நடைபெறும் நவராத்திரி விழாவில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் பங்கேற்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது. குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் ஊர்வலமாக வருகிற 12-ந்தேதி புறப்பட்டு செல்கிறது. மீண்டும் சாமி சிலைகள் திருவனந்த புரத்தில் இருந்து 26-ந்தேதி புறப்பட்டு குமரி மாவட்டத் திற்கு வருகிறது. சாமி சிலை கள் குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் செல்வதையும் திருவனந்த புரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு திரும்பி வருவதையும் சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில் திருக்கோவில் நிர்வாகம் மேற்கொள்வது, மேலும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கும் பட்டு மற்றும் துண்டுகள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய இணை ஆணையரிடம் அனுமதி கேட்பது, குமரி மாவட்ட திருக்கோவில்களில் நடை பெறும் திருவிழாக்களுக்கு கோவில் மேலாளர் மற்றும் ஸ்ரீ காரியங்களுக்கு முன் பணம் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

    Next Story
    ×