search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெய்யூர் பேரூராட்சியில் பகுதிகளில் சாலை பணி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார்
    X

    நெய்யூர் பேரூராட்சியில் பகுதிகளில் சாலை பணி ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார்

    • வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இரணியல்:

    நெய்யூர் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக பொது நிதி யிலிருந்து சுமார் ரூ. 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா பேரூராட்சிக்குட்பட்ட அந்தந்த பகுதிகளில் நடந்தது. பேரூராட்சி தலைவி பி.வி பிரதீபா தலைமை தாங்கினார். கவுன்சிலர்கள் ஷீலா, அஜின், ஆசிரியர் மேரி லில்லி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பென் டேவிட் வரவேற்றார்.

    9-வது வார்டு பிலாபிளை செல்லும் சாலையில் அலங்கார கற்கள் பதிக்கும் பணிக்கு ரூ.2 லட்சமும், 8 மற்றும் 9-வது வார்டு குழிவிளையில் இருந்து எரிவிளாகம் பம்பு ரூம் செல்லும் சாலை வரை சாலை சீரமைப்பு ரூ. 9.75 லட்சத்திலும், 14-வது வார்டு இடையன்விளை கிணறு வடக்குபக்கம் முதல் குளம் வரை வடிகால் அமைப்பதற்கு ரூ.4 லட்சத்திலும், 3-வது வார்டு முரசன்கோடு ஆர்சி சர்ச் குறுக்குசாலையில் சிமெண்ட் தளம் அமைக்க ரூ. 6.50 லட்சத்திலும், 7-வது வார்டுக்குட்பட்ட பாதிரிகோடு முதல் முரசங்கோடு இணைப்பு சாலை சீரமைப்பு ரூ. 9.85 லட்சத்திலும் உள்ள பணிகளை குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குளச்சல் சட்டமன்ற தொகுதி தி.மு.க. மேற்பார்வையாளர் உசிலம்பட்டி அருண், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×