என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
- தேர்த்திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பக்தர்கள் அலகுகுத்தி அக்னி சட்டி எடுத்து பூங்கரகம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா, கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து, அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி அம்மன் தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அப்போது அம்மனுக்கு பூச்சாட்டுதல், அபிஷேகம்-அலங்காரம், மாவிளக்கு பூஜை மற்றும் கரக ஊர்வலம் ஆகியவை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து. பக்தர்கள் அலகுகுத்தி அக்னி சட்டி எடுத்து பூங்கரகம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோத்தகிரி முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் குமரவேல், இளங்கோ, ராமமூர்த்தி, முத்துசாமி, ராமசாமி, அமிர்தலிங்கம், சுப்பிரமணி, பாலு ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.






