search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
    X

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

    • கோட்டை மாரியம்மன் விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள்.
    • இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள்.

    தற்போது இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தாண்டுக்கான ஆடி திருவிழா வருகிற 26-ந் தேதி (ஆடி மாதம் 10-ந் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கிறது. முதல் நாளான 26-ந் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த மாதம் 8-ந் தேதி இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பும், 10 -ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பொங்கல், மாவிளக்கு, பிரார்த்தனை செய்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    16-ந் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிேஷகம், உற்சவர் அம்மனுக்கு அபிேஷகம், அலங்கார ஆராதனை மற்றும் அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. விழாவில் தினமும் சிறப்பு பூைஜகள் மற்றும் அபிேசகம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்வார்கள்.

    கடந்த 2 ஆண்டாக கொரோனா ஊரடங்கினால் ஆடித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடித்திருவிழாவின் முன்னோட்டமாக கால்நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. பின்னர் முகூர்த்தக்கால் நடப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


    Next Story
    ×