என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறையில் விசைப்படகு, பரிசல் போக்குவரத்து நிறுத்தம்
- கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவிரி ஆற்றின் ஒரு கரையிலும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் காவிரி ஆற்றின் மறுக்கரையிலும் அமைந்துள்ளது.
- இந்த போக்குவரத்து மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவார்கள்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் காவிரி ஆற்றின் ஒரு கரையிலும் தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் ஒன்றியம் காவிரி ஆற்றின் மறுக்கரையிலும் அமைந்துள்ளது. கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோட்டையூர் மற்றும் பண்ணவாடி பரிசல் துறை பகுதிகளில் இருந்து தர்மபுரி மாவட்டம் நாகமரை பெண்ணாகரம் ஆகிய பகுதிகளுக்கு காவிரி ஆற்றின் ஒரு கரையில் இருந்து மற்றொரு கரைக்கு பரிசல் மற்றும் விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இந்த போக்குவரத்து மூலம் சேலம் மாவட்டத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருவார்கள். தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் அவ்வப்போது நீர்வரத்து திடீர் திடீரென அதிகரித்து வருகிறது.
இதனால் கோட்டையூர் மற்றும் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் இருந்து இயக்கப்பட்ட விசைப்படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்திற்கு தர்மபுரி மாவட்டம் நாகமரை, பென்னாகரம், பூச்சியூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தற்போது சாலை போக்குவரத்து மூலம் மேட்டூர், தர்மபுரி வழியாக சென்று வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் சுமார் 2000 க்கு மேற்பட்ட மீனவர்கள் மேட்டூர் மீனவ கூட்டுறவு சங்கம் மூலம் உரிமம் பெற்று மீன்பிடிப்புத் தொழில் நடத்தி வருகிறார்கள். தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மீனவர்கள் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க இயலாத நிலமை ஏற்பட்டுள்ளது. மேலும் அணை நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளதால் மீனவர்களுக்கு மீன்கள் கிடைப்பது என்பது மிகவும் அரிதாகி உள்ளது. இதனால் மீன்பிடிப்புத் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது .
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்