search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
    X

    கோவில்பட்டி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

    • சங்கத்தின் தலைவராக ராஜா என்ற விஜி, செயலாளராக எஸ்.கே. அசோக், பொரு ளாளராக சந்தனகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • கூட்டத்தில் உறுப்பினர்கள் சாலை விதிகளை கடைபிடித்து ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் செல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நுகர்பொருள் விநியோ கஸ்தர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு எட்டையாபுரம் சாலையில் உள்ள வினியோகஸ்தர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவராக ராஜா என்ற விஜி, செயலாளராக எஸ்.கே. அசோக், பொரு ளாளராக சந்தனகுமார், துணைத் தலைவராக ஜெய பாஸ்கர், துணைச் செயலா ளராக ராஜகுரு, ஒருங்கி ணைப்பாளராக அசோக் குமார், கவுரவ ஆலோ சர்களாக பால சுந்தரம், சீனி வாசன், சந்திரகண்ணன், அழகுலட்சுமணன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    அதேபோல் செயற்குழு உறுப்பினர்களாக தினகரன், ரவிச்சந்திரன், தினேஷ் பாலாஜி, செல்லக்கனி, ஜெயமணி, கணேஷ்குமார், செல்வகுமார், ராமர், பெரியசாமி, செல்வராஜன் ஆகியோரும். புகார்க்குழு உறுப்பினர்களாக ஆனந்த், முத்துக்குமார், சங்கர நாராயணன், கோபால கிருஷ்ணன், மகாராஜன் ஆகியோரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    தொடர்ந்து விநியோ கஸ்தர்கள் சங்க நிர்வாகி அசோக்குமார் டாக்டர் பட்டம் பெற்றதற்கு உறுப்பினர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    கூட்டத்தில் உறுப்பி னர்கள் சாலை விதி களை கடைபிடித்து ஹெல் மெட் அணிந்து மோட்டார் சைக்கி ளில செல்ல வேண்டும். குடோன்களில் காலா வதியான பொரு ட்களை தனி இடத்தில் வைத்து காலாவதியான பொருள்கள் என்று பெயர் பலகை வைக்க வேண்டும். மக்களுக்கு தரமான, சுகாதாரமான பொருட்களை வியா பாரம் செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. அதற்கு உண்டான தேதி களில் உறுப்பினர்கள் தவறாது போர்டலில் பதிவிட வேண்டும். பொரு ட்களை விநி யோகிக்கும் போது பாலித்தீன் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது. ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய தமிழக அரசி ற்கு தொடர்ந்து கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மா னங்களை நிறைவேற்றினர்.

    Next Story
    ×