என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முருகன் கோவிலில் கிருத்திகை தேர்திருவிழா
- 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று, சாமிக்கு பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
- இதே போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருக பெருமானின் வேட மணிந்து நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் ஸ்ரீ குழந்தை வடிவேல் முருகன் ஆலயத்தின் 53-ம் ஆண்டு ஆடி கிருத்திகை தேர் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 4-ம் தேதி ஊர் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றுதல் மற்றும் விரதம் இருக்கும் பக்தர்களுக்கு கங்கனம் கட்டுதலுடன் இடும்பன் சாமிக்கு முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து 8-ந் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சாமிக்கு கங்கை பூஜையுடன் காவடிகள் அலங்கரித்தல் உள்ளிட்ட சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பூஜைகள் நடைபெற்றன.
அதனையடுத்து பிற்பகல் 2 மணியளவில் விரதம் இருந்த பக்தர்கள் முருக பெருமானின் கோவிலில் பூசாரியின் மூலம் அலகு குத்துதல், முதுகில் தேர் இழுத்தல், உடல் முழுவதும் எழுமிச்சை பழம் கோர்த்தல், பால் காவடி எடுத்தல், பன்னீர் காவடி எடுத்தல், புஷ்ப காவடி எடுத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்டவைககளுடன் சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் இருந்து ஊர்வ லமாக சென்று கோவிலை வலம் வந்து நேர்த்தி கடனை செலுத்தினர்.
இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக பால்குடம் சுமந்து சென்று, சாமிக்கு பாலாபிஷேக சிறப்பு பூஜையும் நடைபெற்றன.
இதே போல் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முருக பெருமானின் வேட மணிந்து நடனமாடி பக்தர்களை மகிழ்வித்தனர்.
இத்தேர் திருவிழாவிற்கு சுற்று வட்ட பகுதிகளை சேர்ந்த 7-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பாஸ்கர், ஊர் கவுண்டர்கள் முத்து, ராஜா, பழனி, கண்ணன், செந்தில் மந்திரி கவுண்டர், ராஜா உள்ளிட்டோர் செய்திரு ந்தனர்.
இதனை தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது.