என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்:ஆடிபெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
    X

    முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்:ஆடிபெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

    • குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் திருவிழா நாளை கொடி யேற்றத்துடன் தொடங்க உள்ளது.
    • இதனை முன்னிட்டு கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. மிகச்சிறந்த பரிகார ஸ்தலமான இக்கோவிலில் ஆடிபெருந்திருவிழா சிறப்பாக கொண்டா ட ப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா நாளை கொடி யேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    கோவில் வளா கத்தில் பக்தர்களு க்காக தடுப்பு வேலிகள் அமை க்கும் பணி நடந்தது. சனீஸ்வர பகவான் கோவில் ஆடி மாத சனி க்கிழ மைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு வரும் பக்தர்கள் சுரபி நதியில் நீராடி காக்கைக்கு எள் சாதம் படைத்து நல்லெ ண்ணெய் விள க்கேற்றி கொடி மரத்திற்கு உப்பு, பொறி படைத்து வணங்கு வார்கள். மேலும் மூலஸ்தானத்தில் உள்ள சனி பகவானையும் வழிபாடு செய்வார்கள்.

    ஆடிமாதம் 5 சனிக்கிழமை களிலும் ஆடிப்பெருந்திரு விழா கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் பக்தர்க ளுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்து உத்தமபாளையம் தாசில்தார் அலுவலகத்தில் நடை பெற்றது. பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு சுகாதாரம், அடிப்படை வசதிகளை நிைறவேற்றி தருவது குறித்து எடுத்துரைத்தனர்.

    Next Story
    ×