என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு 25-ந் தேதி விடுமுறை விடவேண்டும் - ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்
- கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட தசரா குழுவின் தலைவர் மற்றும் பிரதிநிதி கள் கலந்து கொண்டு தங்களது ஆலோ சனைகளை வழங்கினர்.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திரு விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிர த்திற்கு மேற்பட்ட தசரா குழுக்கள் கலை நிகழ்ச்சி நடத்தி காணிக்கை வசூல் செய்வார்கள்.
ஆலோசனை கூட்டம்
தசரா குழுவினர் திருவிழாவின் போது நடந்துகொள்ளும் முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் அருகில் உள்ள சிவனணைந்த பெருமாள் திருமண மண்டபத்தில் நடந்தது. திருச்செந்தூர் ஆர்.டி.ஒ., வாமணன் தலைமை தாங்கினார்.
திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், போக்கு வரத்து துறையை சேர்ந்த மயிலேறும் பெருமாள், குலசேகரன் பட்டினம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் செயல் அலுவலர் ராமசுப்பி ரமணியன் வரவேற்றார்.
தொடர்ந்து பக்தர்களின் கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டு கோள் வைத்து பேசினார்.
4 மாவட்டங்களுக்கு விடுமுறை
கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட தசரா குழுவின் தலைவர் மற்றும் பிரதிநிதி கள் கலந்து கொண்டு தங்களது ஆலோ சனைகளை வழங்கினர். பெரும்பா லானவர்கள் 9, 10, 11-ம் திருவிழா நாட்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், வருகிற 24-ந்தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. மறுநாள் 25-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுவதால் திருவிழாவில் கலந்து கொள்ளும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படும்.
எனவே நான்கு மாவட்டங்களில் மட்டும் 25-ந்தேதி விடுமுறை விட வேண்டும் என தெரிவித்தனர்.
ஏற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் ஆர்.டி.ஒ. வாமணன் கூறுகையில்,
தசரா குழுக்களின் ஆலோ சனைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் விரிவாக செய்யப்படும் என தெரிவித்தார். முடிவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் குலசேகரன் பட்டினம் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கணேசன், நுகர்வோர் பேரவை மாநில தலைவர் மோகன்சுந்தரம், தாண்ட வன்காடு கார்த்தி கேயன், பிச்சிவிளை சுதாகர், ஒடக்கரை சுகு, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்