என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா-72 ஏக்கரில் 1000 வாகனங்கள் நிறுத்த சீரமைப்பு பணி தீவிரம்
- தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தம் செய்வதற்காக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த திரு விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சுமார் 1000 வாகனங்கள் நிறுத்துவதற்காக 72 ஏக்கர் பரப்ப ளவிலான பகுதிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 144 அடிஉயர் கோபுர மின் விளக்குகள் அமைக்க ப்பட உள்ளது. குலசேகரன் பட்டினம் தருவைகுளம், கருங்காளி அம்மன் கோவில் சன்னதி தெரு சந்திப்பு, கியாஸ் குடோன் அருகே, மணப்பாடு செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன நிறுத்தம் செய்வதற்காக அப்பகுதியில் உள்ள முட்செடிகள் அகற்றப்பட்டு, தரைகள் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்ட இந்து சமய அறநிலை யத்துறை இணை ஆணையர் அன்புமணி ஆலோச னையின் பேரில் கோவில் செயல் அலுவலர்கள் ராம சுப்பிரமணியன், வெங்க டேஸ்வரி ஆகியோர் மேற்பா ர்வையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.