என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குலசேகரன்பட்டினம் தசரா 3-ம் திருநாள் - அன்னை முத்தாரம்மன் இன்று இரவு ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்
- அன்னை முத்தாரம்மன் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 3 -ம் நாளான இன்று இரவு 9 மணிக்கு அன்னை முத்தாரம்மன் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலத்தில் பவனி வந்துபக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிசேகங்களும் மாலை 4 மணிக்கு சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.
விரதம் இருந்து வரும் பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி, காப்பு கட்டி விரதத்தை தொடர்ந்து வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடிஇணை ஆணையர் அன்புமணி, உதவிய ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தசரா குழுவினர் வந்து கடலில் புனித நீர் எடுத்து கோவில் வளாகத்திற்கு வந்து சுவாமி தரிசனம் செய்வதும் நடந்து கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட மருத்துவ துறை, போலீஸ் துறை, மின்சார துறை போன்ற பல்வேறு அரசு துறை அதிகாரிகள் குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வலம் வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துப்புரவு பணிகள் தீவிரம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி சுமார் 15 நாட்கள் உடன்குடி மற்றும் குலசேகரன் பட்டினம் பகுதியில் வேடமணிந்து பக்தர்கள் வீதி வீதியாக நடமாடுவார்கள். பல இடங்களில் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் ஆங்காங்கே அமர்ந்திருந்து உணவு தயாரித்து சாப்பிடுவார்கள். அதனால் குலசேகரன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சொர்ன பிரியா, துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் மேற்பார்வையில் துப்புரவு பணியாளர்கள் குலசேகரன்பட்டினம் நகர் முழுவதும் இரவு பகலாக துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தலைவர் ஹூமைராஅஸ்ஸாப் கல்லாசி, துணைத் தலைவர் மால் ராஜேஷ், செயல் அலுவலர் பாபு ஆகியோர் மேற்பார்வையில் இரவு பகலாக துப்புரவு பணி தொடர்ந்து நடந்து வருகிறது.கிருமி நாசினிகள் தெளிப்பதும், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதும், கழிவு நீரை தேங்க விடாமல் தடுப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்