search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதிவைத்தியநாதசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
    X

    கும்பாபிஷேகம் நடந்தது.

    ஆதிவைத்தியநாதசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா

    • கடந்த 18-ந் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
    • கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமான கலசத்தை வந்தடைந்தன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் பாண்டூர் கிராமத்தில் பாலாம்பிகா சமேத ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.

    பஞ்ச வைத்தியநாத ஸ்தலங்களில் 2-வது தளமான கோவிலில் பஞ்சபாண்டவர்கள் சுவாமியை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர்.

    மாணிக்க வாசகரால் போற்றி பாடல் பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பாபி ஷேகத்தை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி பூர்வாங்க பூஜைகளும் 18 ஆம் தேதி யாக கால பூஜைகளும் தொடங்கி நடைபெற்றன.

    நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து. மகாபூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வளம் வந்து விமானங்களை அடைந்தன.

    இதனை அடுத்து வேத மந்திரங்கள் ஓத மங்கள வாத்தியங்கள் இசைக்க சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் அபிஷேக ஆராத னைகள் நடை பெற்றன.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    கும்பா பிஷேகத்தை மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவ ஆகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையிலானோர் நடத்தி வைத்தனர்.

    முன்னதாக சித்தி விநாயகர் கோவில் கும்பா பிஷேகம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர் கிராம மக்கள் ஆகியோர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×