என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோவையில் தொழிலாளி பலி கோவையில் தொழிலாளி பலி](https://media.maalaimalar.com/h-upload/2022/11/28/1798890-deadbody.webp)
X
கோவையில் தொழிலாளி பலி
By
மாலை மலர்28 Nov 2022 2:35 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கார்த்திக் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
- லாரி மோதியதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கோவை,
சிவகங்கை மாவட்டம் வெட்டிகுளத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சித்தாபுதூர் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கார்த்திக் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த கார்த்திக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X