search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு நிலுவை தொகை பெற சட்ட ரீதியாக ஆலோசனை- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.பேட்டி
    X

    எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.

    விவசாயிகளுக்கு நிலுவை தொகை பெற சட்ட ரீதியாக ஆலோசனை- எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி.பேட்டி

    • தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.
    • ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 21-22-ம் ஆண்டு முதல் ரூ.114 கோடி மனித சக்தி நாள் உருவாக்கப்பட்டு உள்ளது. 22-23-ம் ஆண்டு நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    தூய்மை இந்தியா இயக்கத்தில் வல்லம் பேரூராட்சியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

    அதனைப் பின்பற்றி மற்ற பேரூராட்சிகள், நகராட்சிகளில் கழிவுகள் மேலாண்மை அமைக்க ஆலோசிக்கப்பட்டது.

    தேசிய நெடுஞ்சாலை துறையில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் பூண்டி, அம்மாபேட்டை வழியாக அந்த தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைவாக முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    மின்சாரத் துறையின் மூலம் மாநகராட்சிகளில் நடைபெறும் சாலை விரிவாக்கங்களில் மின்சார துறைகளின் தேவைகளை நிறைவேற்றி தரவும், இரும்புதலையில் மின் துணை நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள மின் இலாகா அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாநகராட்சியில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் நெல்லுக்கு இணையாக பயிரிடப்படும் கரும்பில் புதிய வகை நோய் காணப்படுகிறது.

    அதனை கட்டுப்படுத்துவதற்கு வேளாண்துறைக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகைகளை சட்டரீதியாக பெறுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×