search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை தச்சநல்லூரில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    விழிப்புணர்வு முகாம் நடந்த போது எடுத்த படம்.

    நெல்லை தச்சநல்லூரில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

    • நெல்லை மாவட்ட 1-வது நீதிமன்ற குற்றத்துறை நடுவர் நீதிபதி திரிவேணி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கிராம உதயம் கோபாலசமுத்திரம் தலைமை அலுவலகம் சார்பாக கடந்த 23-ந் தேதி தச்சநல்லூர் திருப்பாற்கடல் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான நலச் சட்டங்கள் மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட 1-வது நீதிமன்ற குற்றத்துறை நடுவர் நீதிபதி திரிவேணி தலைமை தாங்கி தொடங்கி வைத்து சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினார் . கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்று பேசினார். பகுதி பொறுப்பாளர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், ஜெபமணி, மரியமிக்கேல், ஜீவா அருள் முருகன் கோபால், ஆறுமுகத்தாய் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பிரேமா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 200- க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

    Next Story
    ×