search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டாஸ்மாக் சேல்ஸ்மேன்கள் உதவியுடன் அமோக செல்லிங் விற்பனை
    X

    மதுபானங்களுடன் கைதான இந்திராணி.

    டாஸ்மாக் சேல்ஸ்மேன்கள் உதவியுடன் அமோக செல்லிங் விற்பனை

    • தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட நேர ங்களிலும், மதுபானங்கள் அமோகமாக விற்பனை யாகிறது.
    • சேல்ஸ்மேன்கள் உதவி இல்லாமல் இதுபோன்ற செல்லிங் நடைபெறாது என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு கடை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் நேரங்களில் மதுபானம் விற்கப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வெளியிடங்களில் மதுபான ங்கள் விற்பவர் மீது நடவடிக்கை எடுக்க ப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடைசெய்யப்பட்ட நேர ங்களிலும், மதுபானங்கள் அமோகமாக விற்பனை யாகிறது. சேல்ஸ்மேன்கள் உதவியுடன் மதுபான விற்பனையாளர்கள் இதனை கூடுதல் விலை கொடுத்து விற்று வருகின்ற னர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதுபோன்ற விற்பனையில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

    கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையில் போலீசார் கருநாக்கமுத்தன்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இந்திராணி என்பவர் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கை யில், சேல்ஸ்மேன்கள் உதவி இல்லாமல் இதுபோன்ற செல்லிங் நடைபெறாது.

    அதிகளவு மதுபாட்டி ல்களை கடையில் மொத்த மாக வாங்கிச்செல்பவர்கள் இதுபோன்ற விற்பனை யில்தான் ஈடுபடுவார்கள் என தெரிந்திருந்தும் அவர்களுக்கு மதுபான ங்களை விற்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×