search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    புதிய தொழில் முனைவோர் திட்டத்தால் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது; முதல்-அமைச்சருக்கு பயனாளிகள் நன்றி
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    புதிய தொழில் முனைவோர் திட்டத்தால் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது; முதல்-அமைச்சருக்கு பயனாளிகள் நன்றி

    • 42 ேபருக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
    • தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

    தரங்கம்பாடி:

    இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஊக்குவித்து வருகிறார். படித்த இளைஞர்களை, முதல் தலைமுறை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.149 கோடி மானியத்துடன் 929 திட்டங்களுக்கு நிதி நிறுவனங்களால் இறுதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

    படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4151 பயனாளிகளுக்கு ரூ.41 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டம் குறித்து மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது:-

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்று சொல்லக்கூடிய இந்த திட்டத்தின் கீழ் 2021-2022-ம் ஆண்டு 42 நபர்களுக்கு 36 லட்சம் இலக்கு நிர்ணயக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் இதுவரை 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    2022-2023-ம் ஆண்டிற்கு 1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 17 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத மானியத்துடன் 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் 55 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 25 சதவீத கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த திட்டத்தில் பயன் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட பயனாளிகள் தங்களது கருத்துகளை கூறிய விவரம் வருமாறு:-

    என்னுடைய பெயர் கார்குழலி. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசித்து வருகிறேன்.

    நான் இளநிலை வணிகவியல் பட்டதாரி ஆவேன். நான் வேலைக்கு செல்லாமல் சொந்தமாக தொழில் ஆரம்பித்து வளர வேண்டும் என முனைப்புடன் இருந்தேன்.

    அந்த சமயத்தில் கலெக்டரின் மாவட்ட தொழில் மையத்தில் தமிழக அரசின் திட்டங்களை பற்றி செய்தி தாளில் வெளியிடப்பட்ட விளம்பர செய்தியை பார்த்து, மயிலாடுதுறை கச்சேரி சாலையில் இயங்கி வரும் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தை தொடர்பு கொண்டேன்.

    அதன் பிறகு ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில் தொடங்க விண்ணப்பித்தேன்.

    எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 53.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.10.09 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் பேங்க் ஆப் இந்தியா வங்கி மயிலாடுதுறை கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.

    தற்போது 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன்.

    இது போன்ற திட்டங்களின் வாயிலாக படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை காக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி என்றார்.

    குத்தாலத்தை சேர்ந்த சிவபாரதி கூறும்போது, நான் ஒரு பொறியியல் பட்டதாரி. சொந்தமாக தொழில் தொடங்கி அதன் வாயிலாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என உறுதியுடன் இருந்தேன்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற நேர்முக தேர்வில் உரிய பரிசீலனைக்கு பின் எனது விண்ணப்பம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 136.14 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.38.44 லட்சம் மானியத்துடன் எனது விண்ணப்பம் சிட்டி யூனியன் வங்கி குத்தாலம் கிளைக்கு விண்ணப்பம் பரிந்துரை செய்யப்பட்டது.

    அதனடிப்படையில் வங்கி மேலாளர் தொழில் கடன் வழங்கினார்.

    தற்போது எனது வாழ்வாதாரம் உயர்ந்து, வேலை வாய்ப்பு வழங்கும் நிலைக்கு உயர்ந்துள்ளேன். முதலமைச்சருக்கு எனது நன்றி என்றார்.

    Next Story
    ×