என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆலங்குளம் அருகே கால்நடை சுகாதாரம்- விழிப்புணர்வு முகாம்
- கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம்:
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் முதல்-அமைச்சரின் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தில் நெல்லை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் பொன்னுவேல் மற்றும் தென்காசி கோட்ட உதவி இயக்குநர் மருத்துவர் மகேஸ்வரி ஆகியோரின் அறிவுரைப்படி ஆலங்குளம் கால்நடை மருந்தகம் சார்பில் இன்று நடைபெற்றது.
நாரணபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செல்வி மணிமாறன் தலைமை தாங்கி முகாமினை ெதாடங்கி வைத்தார். நெல்லை நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் மருத்துவர் ஜான்சுபாஷ் முன்னிலை வகித்தார். கால்நடைகளை தாக்கும் தோல் கழலை நோய் மற்றும் பறவைக் காய்ச்சல் நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி நோயுற்ற கால்நடைகளின் ரத்தம், பால், சாணம், சிறுநீர் மற்றும் நாசி திரவம் போன்ற மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தார்.கால்நடை மருத்துவர்கள் ஊத்துமலை டாக்டர் ரமேஷ், நெட்டூர் டாக்டர் ராமசெல்வம், ஆலங்குளம் டாக்டர். ராஜஜூலியட் ஆகியோரால் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினை பரிசோதனை, செயற்கை முறை இன விருத்தி, மடிவீக்க நோய் சிகிச்சை, தடுப்பூசி,கிடாரி கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் மற்றும் தாது உப்புக் கலவைகள் வழங்கப் பட்டது. சிறந்த கால்நடை பராமரிப்பு மேலாண்மை விருது மற்றும் கன்று பேரணி நடத்தி சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆலங்குளம் கால்நடை மருத்துவர் ராஜஜூலியட் நன்றி கூறினார். கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிச்சையா , முப்பிடாதி மற்றும் நாரணபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கால்நடை வளர்க்கும் ஏராளமான விவசாயிகள் முகாமில் கலந்துகொண்டனர்.