என் மலர்
உள்ளூர் செய்திகள்

மகேந்திர மங்கலத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்த போது எடுத்த படம்.
மகேந்திர மங்கலத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை
- நன்னீராட்டு திருவிழா மன்ற கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
- ஏற்பாடுகளை மன்ற தலைவர் சரவணன் செய்திருந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் அருகிலுள்ள மகேந்திர மங்கலத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் 12-ம் ஆண்டு மறுத்திருக்குட நன்னீராட்டு திருவிழா மன்ற கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாவட்ட தலைவர் டி.கே. பழனியம்மாள் மனோகரன், துணைத்தலைவர் மல்லிகா, நிர்வாக குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், சண்முகம், வீரன், ராமசாமி, பசுவராஜ், அம்மணி அம்மாள் மற்றும் தருமபுரி, பாலக்கோடு , பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத் தலைவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கு ஏற்பாடுகளை மன்ற தலைவர் சரவணன் செய்திருந்தார்.
Next Story






