என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரிசிபாளையத்தில் 2 வீடுகளின் பூட்டு உடைத்து நகை, பணம் கொள்ளை
- அரிசிபாளையத்தில் நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர். இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் சையத் கபூர் தெருவை சேர்ந்தவர் பரணி என்கிற பழனி (வயது 45). இவர் தம்மண்ணன் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை இவரும், இவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு கடைக்கு சென்றனர்.
இந்நிலையில் மாலை வீட்டுக்கு வந்த பழனி, வீட்டின் கதவுகள் திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த துணிகள் அனைத்தும் கலைந்து கிடந்தது.
மேலும் பீரோவில் வைத்திருந்த ரூ.13 ஆயிரம் ரொக்கம், 1 1/2 கிராம் தங்க நகைகள், பூஜை அறையில் உண்டியல்களில் இருந்த சுமார் ரூ.7 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து பழனி உடனடியாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதே போல் அரிசிபாளையம் நாராயணசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளி தொழிலாளி சக்திவேல் (45) என்பார் வீட்டிலும் நேற்று மதியம் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.