search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    82 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
    X

    82 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்

    • அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்
    • 10 லட்சம் பேரையாவது கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் .

    கோவை:

    ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் பகுதி,நகர,ஒன்றிய, பேரூராட்சி அமைப்பா ளர்கள் துணை அமைப்பா ளர்கள் கூட்டம் நவ இந்தியாவில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.

    கூட்டத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா என்ற கிருஷ்ணன் ,மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

    தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 23-ந்தேதி கோவை வருகிறார். 24-ந் தேதி கிணத்துக்கடவில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் கலந்து கொண்டு ஒரே மேடையில் 82 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அதன் பின்னர் பொள்ளாச்சியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

    தமிழக முழுவதும் 234 தொகுதியிலும் திராவிட மாடல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் வருகிற 12,13,14 ஆகிய தேதிகளில் 10 சட்ட மன்ற தொகுதிகளிலும் நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் குறைந்தபட்சம் 10 லட்சம் பேரையாவது கட்சியில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் .

    கோவை அவினாசி ரோட்டில் புதிதாக கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பணிகள் விரைவில் தொடங்கும். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அதில் கோவை - பொள்ளாச்சி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற நிலையை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டம் 100 யூனிட் இலவச மின்சரம், விவசாயிகள், விசைத்தறி, குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை வாபஸ் பெற தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தும்.

    எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.க ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவே இல்லை என்ற பச்சை பொய்யை சொல்லி இருக்கின்றார். அ.தி.மு.க ஆட்சியில் உயர்த்தப்பட்டது அவருக்கு தெரியவில்லையா.

    அ.தி.மு.க.வினரின் எஜமானர்கள் பா.ஜனதாவினர்.

    அவர்கள் சொல்வதைதான் அ.தி.மு.க செய்யும், சுயமாக யோசிக்க முடியாது.கோவையை பொறுத்த வரை வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு மாவட்டத்தில் உள்ள 3041 பூத் வாரியாக பணிகளை தொடங்கி இருக்கின்றோம்.

    கோவை மாவட்டத்தில் உள்ள 31 லட்சம் வாக்காளர்களில் 10 லட்சம் வாக்காளர்கள் தி.மு.க.வினர் என்ற நிலையை ஏற்படுத்த திட்டமிட்டு பணிகளை செய்து வருகின்றோம் . இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, நாகராஜசோழன், அசரப் அலி, சபரி கார்த்திகேயன், விஜயகுமார், துணை அமைப்பாளர் திருமலை ராஜா, மாணவரணி அமைப்பாளர் விஜி கோகுல் முன்னாள் எம்.பி.நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×