search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஜினீயருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க கோரி உத்தரவு
    X

    என்ஜினீயருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க கோரி உத்தரவு

    • மதுரை அருகே பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டார்.
    • என்ஜினீயருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க கோரி தமிழக அரசுக்கு மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது.

    மதுரை

    மதுரை சிலைமான் புளியங்குளத்தை சேர்ந்தவர் சையது முகமது. தேசிய நெடுஞ்சாலைத்துறையில் என்ஜினீயராக பணியாற்றுகிறார். இவருடைய சகோதரர் ராஜா முகமது.

    இவர்கள் இருவரும் அக்காள்-தங்கையை திருமணம் செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக சையது மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டவர்கள் மீது மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை விசாரிக்குமாறு மேலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து மகளிர் போலீசார், இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் அவர்கள் வெளி யில் வந்தனர்.

    இந்தநிலையில் சையது முகமது, மாநில மனித உரிமை கமிஷனில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    என் மீதும், எனது சகோரேர் மீதும் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மேலூர் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் வழக்கு குறித்து முறையாக விசாரணை செய்வதற்கு எங்களை அழைக்கவில்லை. எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் 20 போலீசாருடன் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி கடந்த 6.7.2019 அன்று எங்கள் வீட்டிற்கு வந்தார்.

    அங்கிருந்த என்னையும், என் சகோதரர் ராஜா முகமதுவையும் கடுமையாக தாக்கி, கைது செய்து அழைத்துச்சென்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக பதிவு செய்யப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை சுப்ரீம் கோர்ட்டு கூறிய வழிகாட்டுதல்களை மேலூர் அனைத்து மகளிர் போலீசார் பின்பற்றவில்லை.

    இதனால் எங்களின் கன்னியத்திற்கு பங்கம் ஏற்பட்டு, கடும் மன உளைச்சலுக்கு ஆளா னோம். எனவே இதற்காக உரிய இழப்பீடு வழங்கவும், போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்று கூறியி ருந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணையம், மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த நிர்மலா தேவியின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அவர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரால் பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.1 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவியிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.

    மனித உரிமை மீறலில் ஈடுபட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கண்டம் தெரிவித்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×