search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு தி.மு.க. அரசு வைக்கும் ஆப்பு: எடப்பாடி பழனிசாமி
    X

    100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு தி.மு.க. அரசு வைக்கும் ஆப்பு: எடப்பாடி பழனிசாமி

    • மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு தி.மு.க. அரசு வைக்கும் ஆப்பு என மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி பேசினார்.
    • ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க. விலும் நின்று ஜெயித்திருக்கிறார்.

    மதுரை

    மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க தி.மு.க. அரசு சொல்ல காரணம் 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு வைக்கும் ஆப்பு என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி னார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அதி.மு.க. சார்பில் கூத்தியார் குண்டு பகுதியில் 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிகொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் அதி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அதி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    தமிழகத்தில் அதி.மு.க. மட்டும் தான் ஏழை மக்களுக்கான கட்சி, இங்குதான் சாதாரண தொண்டன் கூட உச்ச நிலைக்கு வர முடியும். இங்கு தான் ஜனநாயகம் இருக்கிறது ஆனால் தி.மு.க.வில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. அந்த குடும்ப கட்சியில் பல டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களது வேலையே ஊழல் செய்வது தான்.

    தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது. தி.மு.க. தேர்தல் நேரத்தில் அறிவித்த 520 வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். இன்னும் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வால் அடை யாளம் காட்டப்பட்ட 8 பேர் தற்போது தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதில் செந்தில் பாலாஜி என்ற அமைச்சர் 5 கட்சிக்கு சென்று வந்திருக்கிறார்.

    ஒரே 5 ஆண்டுகளில் இரட்டை இலையிலும், தி.மு.க. விலும் நின்று ஜெயித்திருக்கிறார். இந்த அதிசயம் யாருக்கும் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றக்கூடிய அந்த நபர்தான் முதன்மை அமைச்சராக இருக்கிறார். அவரை ஸ்டாலின் வாழ்த்தி கொண்டிருக்கிறார்.

    தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது பேசுவதும், ஆளுங்கட்சியாக இருக்கும்போது பேசுவதும் வேறுபாடாக இருக்கும். தேர்தல் நேரத்தில் கவர்ச்சி யான திட்டங்களை அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அந்த வாக்குறுதி களை காற்றில் பறக்க விடுவது தி.மு.க.வின் வாடிக்கை. தி.மு.க. அரசு இப்போது கேட்டாலே ஷாக் அடிக்கும் வகையில் மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது.

    100 யூனிட் இலவசம் மின்சாரம் அதி.மு.க. ஆட்சியில் அனைத்து மக்களுக்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கப் பட்டது. ஆனால் தற்போது தி.மு.க. அரசு மின் இணைப்புடன் ஆதார் இணைக்க கட்டாயப் படுத்தி வருகிறது. மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து விட்டால் ஏதாவது ஒரு மானியம் மட்டுமே மக்கள் வாங்க முடியும். எனவே இந்த 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு ஆப்பு வைப்பதற்காக தான் இந்த நடவடிக்கையில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.

    மக்களுக்கு சுமை மேல் சுமை ஏற்றி வரும் தி.மு.க. அரசை ஆட்சியில் இருந்து இறக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள். இனிவரும் தேர்தல்களில் அதி.மு.க. அமோக வெற்றியை பெரும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர் பி உதயகுமார், தகவல் தொழில்நுட்ப ப்பிரிவு மண்டல செய லாளர் ராஜ்சத்யன் மற்றும் நிர்வாகிகள் ஏராளமா னோர் கலந்து கொண்ட னர்.

    Next Story
    ×