search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுடுகாட்டில் போதை மருந்துகளை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது
    X

    கைதான வாலிபர்கள்.

    சுடுகாட்டில் போதை மருந்துகளை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது

    • சுடுகாட்டில் போதை மருந்துகளை பதுக்கி வைத்து விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் நேற்று இரவு முத்துப்பட்டிக்கு ரோந்து சென்றனர்.

    மதுரை

    மதுரையில் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவர்கள் போதையின் பிடியில் சிக்கி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர்.

    மதுரையில் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட வருங்கால தலைமுறையை பாதிக்கும் போதைமருந்து கும்பலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமி ஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் தலைமையில் போலீசார் அடங்கிய சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    மதுரை முத்துப்பட்டி சுடுகாட்டு பகுதியில் போதை மருந்துகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று இரவு முத்துப்பட்டிக்கு ரோந்து சென்றனர்.

    பாண்டியன் நகர் சுடுகாடு அருகே 10 பேர் கும்பல் போதை மருந்து, மாத்திரை, ஊசிகளுடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. போலீசார் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி யது. அவர்களில் 2 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 40 பாக்கெட் வலி நிவாரணி மருந்துகள், 5 ஊசி மருந்து, மாத்திரை அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இருவரையும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியை சேர்ந்த ஆஷிக்அலி (26), சாலையூர் பக்கீர்மஸ்தான் மகன் சையதுமுகமதுஆஸ்பெக் (19) என்பது தெரியவந்தது.

    வலி நிவாரணி மருந்து, மாத்திரைகளை போதை மருந்தாக பயன்படுத்தி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விற்பனை செய்த மேற்கண்ட 2 வாலிபர்களையும் சுப்பிரமணியபுரம் போலீசார் கைது செய்தனர்.

    மெடிக்கல் கடைகளில் பிரசவ கால வலி நிவாரணியாக சிறப்பு ஊசி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை டாக்டரின் பரிந்துரை இருந்தால் மட்டுமே வாங்க முடியும். ஒரு சில கும்பல் மருந்து கடைக்காரர்களிடம் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மேற்கண்ட ஊசி மருந்து மாத்திரைகளை வாங்கி, அவற்றை போதை மருந்தாக விற்பனை செய்து வருகிறது.

    இதன் அடிப்படையில் மதுரை நகர் முழுவதும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுப்பிரமணியபுரத்தில் போதை மருந்து, மாத்திரைகளுடன் 2 பேரை கைது செய்துள்ளோம். மதுரையில் போதை மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×