search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
    X

    யோகா குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த புனேவை சேர்ந்த பூஜா என்ற மாணவி இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் சைக்கிள் மூலம் யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவர் மதுரையில் தனது சைக்கிள் யாத்திரை பயணத்தை நிறைவு செய்தபோது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பூஜாவை பாராட்டி, அவருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

    தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை-ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

    • கலால் வரி செலுத்தாமல் தமிழகத்தில் 24 மணி நேரமும் தடையின்றி மது விற்பனை செய்யப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
    • இந்த 24x7 மது விற்பனையால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவே இதனை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் டாஸ்மார்க் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது. டாஸ்மாக் மது விற்பனை நிலையங்களை பயன்படுத்தி இன்றைக்கு, ஊழலுக்கான யுக்தியை தி.மு.க. அரசு கையாண்டு வருகிறதோ என்கிற மிகப்பெரிய ஒரு கேள்விக்குறி எழுந்துள்ளது.

    மாநிலத்தில் பல மாவட்டங்களுக்கு பார்கள் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டர் தொடர்பான, வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக யாருக்கும் பார்கள் உரிமைகளை, அரசு இன்னும் வழங்கவில்லை என்கிற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

    சட்டவிரோதமாக பார்களில், மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் தடையின்றி விற்கப்பட்டு வருக்கின்றன. இதனால் அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வரிப்பணம், இந்த துறையின் அமைச்சருக்கு சொல்லுகிறதோ என்று தி.மு.க. கட்சிக்காரர்களே பேசிகொள்கிற ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

    மது உற்பத்தியாளர்கள் கலால் வரியை முறையாக செலுத்தாமல், மதுபானங்கள் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என்பது அதிர்ச்சி தகவலாக இருக்கிறது.

    அதாவது ஹாலோகிராம் அச்சடிக்கப்படாததால், கலால் வரியை செலுத்தப் படாமல் அரசுக்கு கணக்கில் வராமல் மது பானங்கள் கடத்தப்படுகின்றன. கணக்கில் வராத இந்த மதுபானங்கள் சட்ட விரோதமாக நடத்தப்படும் பார்களை சென்றடைகிறது. இதன் மூலம் வரக்கூடிய பணம் முழுவதும் தனிப்பட்ட முறையில் ஆட்சி யாளர்களுக்கு செல்கிறது.

    இது அரசின் கஜானாவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர், எடப்பாடி பழனிசாமி ஆதாரத்தோடு புள்ளிவிவரத்தோடு தெரிவித்துள்ளார்.

    மதுரை ஐகோர்ட்டு கிளையில் டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும், அரசு 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கப்படவில்லை என்று உறுதிப்படுத்த வேண்டும், அதேபோன்று நேரத்தையும் முறைப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை கூறியுள்ளது.

    24x7 என்று மருத்துவத்திற்கு தான் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் மது விற்பனைக்கு 24x7 நாம் பார்த்ததில்லை இதை தமிழகத்தில் கண்டு இன்றைக்கு சிரிப்பாய் சிரிக்கிறது.

    Next Story
    ×