search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை
    X

    வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை

    • வீடுகளில் வளர்க்கும் கிளிகளை ஒப்படைக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022-ன் படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகளாக அறிவிக்கப் பட்டுள்ளளது. இதன் காரணமாக கிளிகளை வீடுகளில் வளர்ப்பதற்காக விற்பனை செய்வது தண்ட னைக்குரிய குற்றமாகும்.

    இந்நிலையில் மதுரை செல்லூர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் நூற்றுக்கணக்கான கிளிகள் வளர்க்கப்படுவதாகவும், அதற்கு அதனுடைய உடல்வாகுக்கு ஒவ்வாத உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கிளிகளை வளர்ப்பவர் கிளிகளின் இறக்கைகளை வெட்டுதல், கிளிகளை காயப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடு படுவதாகவும் தொடர்ந்து வனத்துறைக்கு புகார்கள் வந்துள்ளது.

    இதனை தொடர்ந்து நேற்று செல்லூர் பகுதியில் மட்டும் ஒரே நாளில் மட்டும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த 10-க்கும் மேற்பட்ட கிளிகளை வனத்துறை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மாவட்ட வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டில் கிளிகளை வளர்ப்பது குற்றமாகும். எனவே கிளிகள் வளர்க்கும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து வருகின்ற 17-ந் தேதிக்குள் கிளிகளை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை மீறி கிளிகளை வீட்டில் வளர்த்தால் வன உயிரினங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×