search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
    X

    புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

    • மதுரையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
    • மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் நடந்தது.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், அதலையில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்றைக்கு அ.தி.மு.க. பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டு, 1½ கோடி தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டு, அனைத்து நீதிமன்றங்க ளாலும், அங்கீகரிக்கப்பட்டு இருப்பவர் எடப்பாடியார் தான்.

    இதை உறுதி செய்கின்ற வகையில், தோழமையில் இருக்கிற தேசிய கட்சியான பா.ஜ.க உள்துறை அமைச்சரை எடப்பாடியார் சந்தித்துள்ளார். இது 1½ கோடி தொண்டர்களுடைய மனதில் புதிய உற்சா கத்தையும், நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது.

    எடப்பாடியார் மீண்டும் முதல்- அமைச்சராக தமிழகத்தில் வரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிற தமிழ்நாட்டு மக்களுக்கு வாராத வந்த மாமனியாக, வரப்பிரசாதமாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது. வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இந்த சந்திப்பு அமைந்திருக்கிறது.

    இன்றைக்கு நடைபெறுகிற தி.மு.க. அரசு கையாலாகாத அரசாக, நிர்வாக குளறுபடியில் இருக்கிற அரசாக, ஒட்டு மொத்த குளறுபடியினுடைய அடையாளமாக இருக்கிறது. 12 மணி நேர வேலை என்று சட்டம் இயற்றி அதை நிறைவேற்றிய மசோதாவை நிறுத்தி வைக்கின்றார். இப்படி பல்வேறு குளறு படிகளில் கல்யாண மண்ட பங்களில் மது விற்பனை செய்வோம் என்று ஒரு உத்தரவு போடுகிறார்கள். மக்கள் கொதித்து போராட்ட களத்துக்கு வந்த பிறகு அதை வாபஸ் வாங்கு கிறார்கள்.

    சர்வதேச விளையாட்டு மைதானங்களில் மதுபானம் அருந்தலாம் என்கிற ஒரு உத்தரவு பிறகு கோர்ட்டு தடை விதித்த பிறகு அதை நிறுத்தி வைக்கிறார்கள். தி.மு.க. அரசுக்கு முடிவுரை எழுதுகிற வகையில் தான் எடப்பாடியார் பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா வை சந்தித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றி வேல், மாவட்ட பொருளாளர் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×