என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம்
- நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
- 1,500 போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்-அமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின், மது–ரையில் கலைஞர் நினை–வைப் போற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் பிர–மாண்ட நூலகம் அமைக்கப் படும் என்று அறி–வித்தார்.
நூலகம் அமைப்பதற்காக மதுரை புது நத்தம் சாலை–யில் பொதுப்பணித்துறை குடியிருப்பு வளாகத்தில் 2.13 லட்சம் சதுர அடி பரப்ப–ளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப் பாக நடைபெற்று வந்தன.
முன்னதாக 2022 ஜனவரி 11-ந்தேதி நூலகம் கட்ட முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் சென்னை–யில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்தநிலையில் அனைத்தும் டிஜிட்டல் மயத்துடன் கூடிய பணிக–ளும் முடி–வுற்று கலை–ஞர் நூலகம் புதுப்பொ–லிவு–டன் அழகுற காட்சி அளிக்கிறது.
நூலக கட்டி–டத்தின் முற் பகுதியில் அலங்கார விளக் குகள், பூஞ்செடி–கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயி–லில் கலைஞ–ரின் பொன் மொ–ழியான புத்தகத்தில் உலகை படிப்போம், உல–கத்தை புத்தக–மாய் படிப் போம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள் ளது.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் பயன்பெ–றும் வகையில் சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட் டுள்ள கலைஞர் நூலகம் மதுரையின் மற்றொரு அடையாளமாக திகழும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.206 கோடி செலவில் பிரம்மாண்டமாக கட்டப்பட் டுள்ள இந்த நூலகத்தில் அனைத்து தரப்பி–னருக்கும் பயனளிக்கும் வகையில் 4 லட்சத்து 30 ஆயிரம் புத்த–கங்கள் உள்ளன.
குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், போட் டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இளம் பெண் கள் என பலரும் இந்த நூல–கத்தின் மூலம் பயன்பெற–லாம். நூல–கம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப் பட்டுள்ளது. லிப்ட் வசதியு–டன் பிரம்மாண்டமாக கட் டப்பட்டுள்ளது நூலகம். குழந்தைகளுக்கான பொழுது–போக்கு அம்சங்க–ளும் இந்த நூலகத்தில் உள்ளன.
மொத்தமுள்ள 8 தளங்க–ளில் முதல் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் முன் னாள் முதல்வர் கரு–ணாநிதி எழுதிய நூல்கள், குழந்தை–கள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள், நாளிதழ்கள், குழந்தைகளுக்கான நூலகப் பிரிவும் உள்ளது.
இரண்டாம் தளத்தில் 3,110 சதுர அடி பரப்பில் தமிழ் நூல்கள் பிரிவும் உள்ளது. மூன்றாம் தளத்தில் 2,810 சதுர அடி பரப்பில் ஆங்கில நூல்கள் பிரிவும், ஆராய்ச்சிக்கட்டு–ரைகளும் நான்காம் தளத் தில் 1,990 சதுர அடி பரப் பில் அமரும் வசதியுடன் கூடிய ஆங்கில நூல் பிரி–வும், போட்டித் தேர்வுக–ளுக்கு தேவையான புத்த–கங்களும் வைக்கப்பட் டுள்ளன.
ஐந்தாம் தளத்தில் 1,990 சதுர அடியில் மின் நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித்தேர்வு நூல் பிரி–வும், ஆறாம் தளத்தில் 1,990 சதுர அடியில் கூட்ட அரங்கு, நூலகத்துக்கான ஸ்டூடியோ, மின்னணு உரு–வாக்கப்பிரிவு, நுண்ப–டச் சுருள், நுண்பட நூலக நிர்வாகப் பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு எனப் பல பிரிவுகள், நிர்வாக அலுவ–லகம் உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று (சனிக்கி–ழமை) மாலை 5 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.
விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா–மொழி வரவேற்று பேசுகி–றார். அமைச்சர்கள்
எ.வ.–வேலு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினர்களாக எச்.சி.எல். குழும நிறுவனர் ஷிவ் நாடார், குழும தலைவர் ரோஷினி நாடார், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பொது நூலகங்கள் இயக்குநர் இளம்பகவத், கலெக்டர் சங்கீதா, சு.வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் நன்றி கூறுகிறார். விழாவில் மதுரை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் கோ.தளபதி, மணிமாறன், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் கள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பல்லாயிரக்க ணக்கா–னோர் கலந்து கொள்கிறார்கள்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் விழா நிகழ்ச் சிக்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. விழா ேமடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார். விழா–வில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின், நாளை பகல் 11.30 மணிக்கு சென் னை–யில் இருந்து மது–ரைக்கு விமானத்தில் வந்தார்.
விமான நிலை–யத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிேவல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய–கருப்பன், ராஜகண்ணப்பன், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி மற்றும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
அங்கிருந்து அழகர் கோவில் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளி–கைக்கு செல்லும் வழியில் முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலி–னுக்கு தி.மு.க.–வினர் வழிநெ–டுக உற்சாக வர–வேற்பு அளித்த–னர்.
முன்னதாக அரசு சுற்றுலா மாளிகை–யில் மதிய உணவு சாப்பிடும் மு.க.ஸ்டா–லின், மாலை 5 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவில் பங்கேற் கிறார். நிகழ்ச்சிகளை முடித் துக்கொண்டு இரவு விமா னத்தில் சென்னை திரும்பு கிறார்.
முதல்-அமைச்சர் மு.க.–ஸ்டாலின் வருகையை–யொட்டி மதுரை விழாக்கோ–லம் பூண்டுள்ளது. 1,500 போலீசார் பாதுகாப்பு பணி–யில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்