என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வடமாநில பெண்ணை கடத்த முயற்சி
- பஸ் நிலையத்தில் திரிந்த வடமாநில பெண்ணை கடத்த முயன்றனர்.
- அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டனர்.
மதுரை
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கடந்த 2 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை நேற்று இரவு சிலர் ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றனர்.
அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவருக்கு உணவு, குடிநீர் கொடுத்து பழ மார்க்கெட் வணிக வளாகத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் எந்த அறக்கட்ட ளையினரும் அந்த பெண்ணை காப்ப கத்தில் சேர்க்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜனதா தலைவர் வக்கீல் முத்துக்குமார், சாம் சரவணன், ரெட்கிராஸ் மூகாம்பிகை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் போலீசார் உதவியுடன் அந்த பெண்ணை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.