என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் கடையடைப்பு-ரெயில் மறியல்
- திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்காவிட்டால் ரெயில் மறியல் நடத்துவோம் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.
- முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றத் தில் முருகப்பெருமானின் முதற்படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக திருப்ப ரங்குன்றத்தில் சாலை, வாகன நிறுத்துமிடம் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் அமைக்கப்பட்டது. மேம்பாலம் அமைக்கப்பட்ட போது இப்பகுதியில் மேம்பாலம் தேவையில்லை சுரங்கப்பாதை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் அதனை மீறி மேம்பாலம் கட்டப்பட்டது.
திருப்பரங்குன்றம் கோவில், காய்கறி சந்தை, திருநகரில் உள்ள பள்ளி களுக்கு பொதுமக்கள், பள்ளி மாணவ- மாணவி கள் ெரயில்வே தண்ட வாளத்தை கடந்து சென்று வந்தனர். திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும், ரயில்வே தண்டவாளம் மற்றும் மேம்பாலத்தை கடந்து வந்து சென்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பாதுகாப்பு கருதி ெரயில்வே நிர்வாகம் தண்டவாளத்தை கடக்க முடியாத வகையில் தடுப்பு அமைத்துள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், பொது மக்கள் அனைவரும் மேம்பாலத்தில் ஏறிச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயமும், முதியவர்களால் நடக்க முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இதையடுத்து இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.இதனை வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு,
ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள், வியாபாரி கள் சங்கத்தினர், பொது மக்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களின் நலன்கருதி திருப்பரங்குன்றம் பஸ் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வருகிற ஜூலை மாதம் 4-ந் தேதி கடையடைப்பு போராட்டம், 19-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்