என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ராயல் பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி ராயல் பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி](https://media.maalaimalar.com/h-upload/2022/08/04/1740935-paramesh-2.jpg)
ராயல் பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதுைர விளாங்குடி ராயல் வித்யாலயா பள்ளியில் செஸ் விழிப்புணர்வு போட்டி நடந்தது.
- 6400 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக சதுரங்க பலகை வரையப்பட்டு இருந்தது.
மதுரை
மதுரை விளாங்குடி ராயல் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி-பெத்தானியாபுரம் இராயல் பப்ளிக் மெட்ரிக் பள்ளிஇணைந்து 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலபடு த்தவும் மற்றும் மாணவ, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல வித போட்டிகள் மற்றும் கண்காட்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக மிக பிரமாண்டமாக சதுரங்க விளையாட்டின் நுணுக்கங்களையும் நகர்வுகளையும் மாணவ மாணவியர் அறியும் வண்ணம் மெகா சதுரங்க போட்டி நடைபெற்றது.
6400 சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமாக சதுரங்க பலகை வரையப்பட்டு மாணவ மாணவிகள் சதுரங்க காய்களை போல் வேடமணிந்து.
அந்த சதுரங்க காய்களின் பண்புகளையும் நகர்வுகளயும் மிக துல்லியமாக மாணவ மாணவியர் ஆர்வத்துடன் அறியும் வண்ணம் சதுரங்க விளையாட்டு விளையாடப்பட்டது.
சதுரங்க போட்டியில் பள்ளி நிறுவனர் ராஜாராம், தாளாளர் ஷகிலா தேவி ராஜாராம், நிர்வாக இயக்குனர்கள் தீபிகாபிரேம்குமார், கெவின் குமார், மகிமா விக்னேஷ் மற்றும் ஆசிரியர்கள்மற்றும் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.