search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதிகரித்து வரும் குழந்தை திருமணம்
    X

    அதிகரித்து வரும் குழந்தை திருமணம்

    • குழந்தை திருமணம் அதிகரித்து வருகிறது.
    • வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் இளம் வயது பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதும் அதனால் இளம் வயதி லேயே குழந்தை பெறுவதும் தொடர் கதையாகி வருகிறது.

    பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் திருமணம் நடத்த வேண்டும் என்பது சட்டம். பெண்ணின் திருமண வயதை 21ஆக உயர்த்த சட்டம் இயற்ற வேண்டும் என்று மசோதா மத்திய அரசின் சட்ட ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

    உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிகளில் பெரும்பாலும், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநி லங்களை சேர்ந்தவர்கள்.

    குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத்தரப்பி ரதேசத்தில் இருப்பதாக யுனிசெப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக உள்ளது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதி களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் திருமணமான டீன் ஏஜ் பெண்கள் பிரசவத்திற்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதே போல் மாவட்ட த்தில் அதிகாரிகளுக்கு தெரியாமல் 18 வயதுக்குட் பட்ட பெண்களுக்கும் திரு மணம் நடத்துவது அதிக ரித்துள்ளது. குறிப்பாக கிராம புறங்களில் குழந்ைத திருமணங்கள் அதிக ரித்துள்ளன.

    சமீபத்திய ஆய்வில் ஊரக மற்றும் நகர்ப்பு றங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3338 டீன் ஏஜ் பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும் அரசு தாலுகா மருத்துவ மனை, அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை களில் நடக்கும் டீன் ஏஜ் பிரசவங்களை கணக் கிட்டால் அதன் புள்ளி விவரங்கள் இன்னும் அதிகரிக்கும்.

    குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொது மக்கள், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரச்சாரம், துண்டு பிரசுரம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×