search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாட்டுவண்டி பந்தயம்
    X

    மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசு கோப்பை வழங்கினார்.

    மாட்டுவண்டி பந்தயம்

    • ஊமச்சிகுளத்தில் தி.மு.க. சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
    • அமைச்சர் மூர்த்தி பரிசு வழங்கினார்.

    அவனியாபுரம்

    மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளத்தில் தி.மு.க. சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை முன்னிட்டு இன்று மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பெரியமாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பங்கேற்றனர். இதில் பெரியமாடு பிரிவில் முதல் பரிசை இரட்டை மாட்டு வண்டிக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்து 99 ரொக்கப் பரிசை அவனியாபுரம் மோகனசாமிகுமார் வண்டி பெற்றது.

    2-வது பரிசை தூத்துக்குடி விஜயகுமார் வண்டி ரூ. ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 99-ஐ பெற்றது. 3-வது பரிசை திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வேப்பங்குளம் கண்ணன் மாட்டுவண்டி ரூ. ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99ஐ பரிசாக பெற்றது.

    சிறிய மாட்டு பிரிவில் முதல் பரிசு பெற்ற மாட்டு வண்டிக்கு ரூ.ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 99ம், 2-வது பரிசு பெற்ற மாட்டுக்கு ரூ.ஒரு லட்சத்து 99-ம், 3-வது பரிசு பெற்ற மாட்டுக்கு ரூ. 75 ஆயிரத்து 99 ரூபாயும் வழங்கப்பட்டன.

    விறுவிறுப்பாக நடந்த இந்த பந்தயத்தை திரளானோர் கண்டு களித்தனர்.

    வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம், வெற்றிக் கோப்பை மற்றும் நாட்டு மாடு கன்றுக்குட்டிகளை அமைச்சர் பி.மூர்த்தி பரிசாக வழங்கினார். ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன், இலக்கிய அணி நேருபாண்டியன், மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன், நிர்வாகிகள் வக்கீல் கலாநிதி, சசிக்குமார், ஆசைக்கண்ணன், பூமிநாதன், ராஜவேல் சரண்யா, பூங்கோதை மலைவீரன், ஒத்தக்கடை சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×