search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்மாவட்டங்களின் வளர்ச்சியே எனது வாழ்நாள் லட்சியம்:ராம.சீனிவாசன் பேச்சு
    X

    தென்மாவட்டங்களின் வளர்ச்சியே எனது வாழ்நாள் லட்சியம்:ராம.சீனிவாசன் பேச்சு

    • தென்மாவட்டங்களின் வளர்ச்சியே எனது வாழ்நாள் லட்சியம் என்று ராம.சீனிவாசன் பேசினார்.
    • பல போராட்டங்களை முன்னெடுத்தன் மூலம் விரைவில் திருமங்கலத்தில் எய்ம்ஸ் கட்டிடம் எழும்ப உள்ளது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் திருமங்கலம், திருப்ப ரங்குன்றம் மதுரை மாநகர் ஆகிய இடங்களில் பா.ஜ.க. மாநில செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன் பிறந்தநாள் விழா கூட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் முன்னிலை வகித்தார்.

    இதில் கருமுத்து கண்ணன், தென் இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் ஆகியோர் பேசினர். இதில் ராம சீனிவாசன் பேசியதாவது:-

    தமிழகத்தில் தென் மாவட்டங்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும் என்பது தான் எனது வாழ்நாள் ஆசை, லட்சியம், கனவு ஆகும்

    அந்த கனவை நோக்கித் தான் நான் வேகமாக அடியெடுத்து வைத்து கொண்டு இருக்கிறேன்.அதில் முதல்படியாக மதுரைக்கு எய்ம்ஸ் வர வேண்டும் என்று பல போராட்டங்களை முன்னெடுத்தன் மூலம் விரைவில் திருமங்கலத்தில் எய்ம்ஸ் கட்டிடம் எழும்ப உள்ளது. விருதுநகரில் ரூ. 200 கோடியில் ஜவுளி பூங்கா திட்டம் அறிவித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவேற்ற முன்வராத மாநில அரசை கண்டித்து அறபோராட்டங்களை செய்ய இருக்கிறேன்.

    அதே போல் கிரானைட் குவாரி ஏழை, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க தாமரை யாத்திரை மேற்கொண்டதின் பலனாக விரைவில் குவாரிகள் திறக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க இன்றளவும் பல போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

    தென்மாவட்டங்களின் சிறுகுறு தொழில், கைவினை தொழிலாளர்கள், வாழ்வாதாரங்களை காக்கும் வகையில் நிதியமைச்சர் நிர்மலா சீத்திராமனிடம் போராடி ஜி.எஸ்.டி.யை குறைத்தும், பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரிவிலக்கும் பெற்று தந்திருக்கிறேன்.

    திரைப்படங்களில் தென்மாவட்டங்களை அடிதடி, ரவுடிசம், என்று ரத்த களறி பூமியாயாக காட்டுகிறார்கள். அந்த மனநிலையை மாற்ற வேண்டும். தென்பகுதிகளில்தான் சுற்றுலா தளங்கள் ஏராளமாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்த ஆன்மீக தளங்கள் உள்ளன.

    சிவனை வணங்குவதாக இருந்தால் கூட தென்னாடுடைய சிவனே போற்றி என்றுதான் வணங்குறோம். அவ்வாறாக இயற்யுகையும், ஆன்மீகமும் இணைந்த தென்மாநிலங்கள் வளர்ச்சி அடைய என் உடம்பில் சக்தி இருக்கும்வரை போராடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விழாவில் 1000 பேருக்கு வேட்டி, சேலைகளும், 1000 மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. திருமங்கலம் நகர் ரெட்டி நலசங்கம் சார்பில் பேராசிரியர் ராம.சீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்து மரியாதை செய்யபட்டது. இதில் முரளிராமசாமி, மோனிகா சதீஷ், திருமலை,லோகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×