என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2022/11/23/1796288-11.jpg)
தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் 25-ந்தேதி நடக்கிறது.
- அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.
![](https://media.maalaimalar.com/h-upload/2022/11/23/1796289-dmkph.jpg)
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்து மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்.எல்.ஏ. பேசினார். அருகில் நிர்வாகிகள் பொன்.முத்துராமலிங்கம், குழந்தைவேலு, வேலுச்சாமி, ஜெயராம், அக்ரி.கணேசன், ஒச்சுபாலு, தனசெல்வம் உள்ளனர்.
..........................
மதுரை
மதுரையில் வருகிற 29-ந் தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்.
இதுகுறித்து மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்-அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாளாம் இளைஞர் எழுச்சி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இந்த விழாவை தென் மாவட்டமே வியக்கும் வகையில் சிறப்பாக நடத்துவது குறித்து ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு பாண்டி கோவில் பின்புறம், மதுரை சுற்றுச்சாலையில் அமைந்துள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இதில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர் செயலாளர்கள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊரா ட்சிக்கழக செயலாளர்கள், தொண்டர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.