search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது-உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது எடுத்த படம். அருகில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் மற்றும் கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.

    தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது-உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு

    • பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரையில் நடந்தது.
    • தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது என விழாவில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசினார்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் அருகில் உள்ள கலைஞர் திடலில் மதுரை வடக்கு, தெற்கு, மாநகர் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவுக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு விருந்தின ராக தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,200 கிரிக்கெட் அணிையச் சேர்ந்த 13 ஆயிரத்து 200 வீரர்களுக்கு கிரிக்கெட் கிப்ட்டுகளை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசும்போது கூறியதா வது:-

    இளைஞர் அணி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு நான் மதுரையில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினேன்.

    அதனை ஒரு மாநாடு போல் அவர் நடத்தினார். தற்போது பேராசிரியருக்கு நூற்றாண்டு விழா நடத்த வேண்டும் என்று சொன்னேன். இந்த குறுகிய காலகட்டத்திற்குள் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி ஒரு மாபெரும் மாநாடு போல் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

    தி.மு.க. அரசு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக திகழ்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு பார்த்து பார்த்து பல திட்டங்களை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழக அரசியலில் இளைஞர்களின் தவிர்க்க முடியாத சக்தியாக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்து உள்ளார். மதுரையில் தி.மு.க. இளைஞரணி மாநாட்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், வேலுச்சாமி, குழந்தை வேல், எஸ்ஸார் கோபி, மாவட்ட பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாவட்ட பிரதிநிதி அழகு பாண்டி,சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், சிறை செல்வன், மேயர் இந்திராணி, இளைஞரணி மாநில துணைச்செயலாளர் ஜி.பி.ராஜா, மாணவரணி அமைப்பாளர் மருது பாண்டி, மூவேந்திரன், மதன்குமார், விமல், கார்த்திக், திருப்பாலை பகுதி செயலாளர் சசிகுமார், மன்றத்தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் வீரராகவன், தி.மு.க. தீர்மானக்குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவனியாபுரம் கிழக்குப்பகுதி இளைஞரணி அமைப்பாளர் கவுன்சிலர் காளிதாஸ், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், திருமங்கலம் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் அதியமான், நகர செயலாளர் மு.சி.சோ. பா.ஸ்ரீதர், ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் கோபி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வைகை மருதுராஜா, சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×