search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அன்னதானம் வழங்குவோர் சான்றிதழ் பெற வேண்டும்  என்ற உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமா?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி
    X

    அன்னதானம் வழங்குவோர் சான்றிதழ் பெற வேண்டும் என்ற உத்தரவை அமல்படுத்துவது சாத்தியமா?-மதுரை ஐகோர்ட்டு கேள்வி

    • அன்னதானம் வழங்குவோர் சான்றிதழ் பெற வேண்டும்.
    • எவ்விதமான பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தவில்லை.

    மதுரை

    மதுரை நரசிங்கம் பகுதியை சேர்ந்தவர் கனகேஸ்வரி. இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் மதுரை சித்திரை திருவிழாவின்போது 5 வகையான உணவுகளை அன்ன தானமாக பக்தர்க ளுக்கு வழங்கி வருகிறேன். அந்த உணவுகளை சுற்றுச் சூழலுக்கு எவ்விதமான விளைவையும் ஏற்படுத்தாத வகையில் வழங்கி வருகிறேன். எவ்விதமான பாலிதீன் பொருட்களையும் பயன்படுத்தவில்லை.

    இந்த ஆண்டும் அன்ன தானம் 20,000 செலவு செய்துள்ள நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் நாளிதழ்களில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுரை சித்திரை திருவிழாவின் போது அன்னதானம் வழங்குவோர் உணவுப் பாதுகாப்பு துறையின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல.

    இதற்கு முன்பு நடைபெற்ற சித்திரை திருவிழாக்களில் இது போன்ற அறிவிப்பு வெளி யிடப்படவில்லை. அதோடு மாவட்ட கலெக்டரின் இந்த அறிவிப்பு நாளிதழ்களில் மட்டுமே வெளியிடப்பட்டுள் ளது. வேறு எந்த சமூக வலைதளங்களிலும் வெளியிடப்படவில்லை. இதனால் ஏராளமானவர்கள் இதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை.

    எனவே மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்குவோர் உணவு பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு செய்து அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்ற மாவட்ட கலெக்டரின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் தண்டபாணி, விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தங்களது உத்தரவில், பிற சமய விழாக்களின் போது இதே போல நிபந்தனை விதிக்கப்பட்டதா? 5 லட்சம் மக்கள் ஒன்றுகூடும் இடத்தில் இந்த விதியை அமல்படுத்தி, சரிபார்ப்பது எப்படி சாத்தியம்? என கேள்வி எழுப்பினர்.

    மேலும் போதுமான கால அவகாசம் வழங்காமல் இதுபோல நிர்பந்திக்க இயலாது. ஆகவே இந்த ஆண்டு இந்த நிபந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டாம். அடுத்த ஆண்டு போதிய கால அவகாசம் வழங்கி, மக்களிடம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இதனை நடைமுறைப் படுத்துங்கள் என அறிவு றுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

    Next Story
    ×